சிறையில் வாடும் போராளிகளை செஞ்சிலுவைச்சங்கம் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் – கனடா வலியுறுத்து

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கை தொடர்பான கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி கனடிய ஆளும் கட்சியின் பாரளுமன்ற உறுபினர் புருஸ் ஸ்ரான்ரொன் (Bruce Stanton) அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தெரிவித்த செய்திக்குறிப்பில், சிறீலங்கா சனாதிபதி மகிந்த இராசபக்ச, இனங்களுக்கிடையே நல்லுணர்வை ஏற்படுத்தல், மீள்கட்டுமானம் என்பவற்றை விரைந்து முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ளார்.

மொழி, மதம் அல்லது இனவேறுபாட்டுக்கப்பால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளை, சகல இனங்களுக்குமான அரசியல் தீர்வை இலங்கை அரசானது வழங்கவேண்டுமென்று கனடாவானது எதிர்பார்க்கின்றது. இலங்கை அரசானது உள்ளூர் மற்றும் சர்வதேச அரசுசாராத அமைப்புக்களுக்கு சிறீலங்காவின் வடபகுதிக்கு எதுவித இடையூறுமற்ற அனுமதி வழங்க வேண்டுமென்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கமானது புனர்வாழ்வு நிலையங்களுக்கும், முன்னைநாள் போராளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைக்கூடங்களுக்கும் செல்வதற்கு முழுமையான அனுமதியை வழங்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றது. அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பான்கிமூனால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் அனுபவரீதியான ஆலோசனைகளைக் கேட்டுப்பெறுவது அனுகூலமானது என்றும் கனடாவானது சிறீலங்காவை ஊக்கிவிக்கின்றது.

கனடிய அரசானது, தனது கொள்கைகளான சுதந்திரம், சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்திற்குக் கட்டுப்படுதல் என்பவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share.

Comments are closed.