சுவிசில் நடைபெற்ற கிட்டு அண்ணாவின் நினைவு எழுச்சி நாள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

கேணல் கிட்டு உட்பட்ட 9 மாவீரர்கள் வங்கக்கடலில் தீயாகி சங்கமித்த சம்பவம் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் சம்பவம். 

 கடந்த 16 .01 .2010 அன்று திச்சினோ மாநிலத்தில் அந்த வீர வேங்கைகளின் நினைவு எழுச்சி நிகழ்வு நடைபெற்றது. 14 :30க்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. திச்சினோ மாநில ஒருங்கிணைப்பாளர் தேசியக்கொடியை ஏற்றிவைக்க, கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளரும் ஊடகவியலாளரும் பொதுச்சுடரை ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. கிட்டு அண்ணா மற்றும் 9 வீரர்களை பற்றிய பாடல்களும், கவிதைகளும் நிகழ்வை எழுச்சியாகக் கொண்டு சென்றது. தொடர்ந்து தாயக பாடலுக்கு அபிநயங்களும் நடைபெற்றது.

எமது தேசத்தின் தேவைகளையும் அரசியல் சார்ந்த கண்ணோட்டங்கள் பற்றி நிகழ்வில் கலந்து சிறப்பித்த சிறப்புவிருந்தினர் உரை ஆற்றியிருந்தார்.  18:00 மணியளவில் கொடியிறக்கலுடன் நிகழ்வு முடிவுற்றது.

{ppgallery}news/kittu_anna/{/ppgallery}

 

 

 

Share.

Comments are closed.