சுவிஸ்சில் வீரத்தந்தைக்கு மலர் வணக்க நிகழ்வு.

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழீழ விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் 10.01.2010 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத் தந்தை, சிங்கள அரசின் கொடுஞ்சிறையில் ஆறுமாதங்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையிலேயே தனது இன்னுயிரை ஈந்த திரு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு பேர்ண் மாநகர மொப்போ மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை பேர்ண் மாநில பொறுப்பாளர் மூர்த்தி அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை உதையபாரதி லிங்கம் ஆசிரியர் அணிவிக்க சுவிஸ் வல்வை ஒன்றியத்தினரால் அன்னாரின திருவுருவ படத்திற்கு மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்தோடு அங்கு வருகை தந்திருந்த மண்டபம் நிறைந்த சுவிஸ்வாழ் தமிழீழ தேசபக்த மக்களால்  மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு

வல்வை சுஜேன் அவர்களால் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்குரிய மலர் வணக்க உரையும் கவிமாலையும் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளின் சுவிஸ்கிளை செயற்பாட்டாளர் திரு. சிவலோகநாதன் அவர்களின் கெளரவ நினைவுரையோடு தமிழீழதேசத்தின் விடுதலை பயணத்தை தலமை தாங்க ஒரு தவப் புதல்வனை தந்த அமரர் திரு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கவிதாஞ்சலியும் அவரின் வழித்தோன்றல் வரலாறும் நினைவு கூறப்பட்டது.

Share.

Comments are closed.