சுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா

Google+ Pinterest LinkedIn Tumblr +

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் அவர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், தமிழர் திருநாளாகிய இத் தைத்திருநாள், இன்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால், திச்சினோ மாநிலத்தில், அம்மாநில இளையோர்களுடனும், அங்குள்ள பாடசாலைகளுடனும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புதடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கலாக்கிச் சூரியனுக்கும், அடுத்தநாள் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

காலை 11 மணியளவில் ஆரம்பித்த இந்நிகழ்வு, நமது கலாசார முறைப்படி விறகடுப்பில் பொங்கியும், அந்நேரத்தில் பொங்கல் பாட்டுக்கள் பாடியும் சிறப்பாக நடைபெற்றது.

[srizonfbalbum id=1]
Share.

Comments are closed.