“ஜி.எஸ்.பி.” வரிச்சலுகையை ஒரேயடியாக விலக்குமா ஐரோப்பிய ஒன்றியம்?

Google+ Pinterest LinkedIn Tumblr +

கிடைக்குமா அல்லது தடைப்படுமா என்று எதிர் பார்க்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்கடன் கடைசியில் அரும்பொட்டில் கொழும்பு அரசுக்குக் கிடைத்தபோது தென்னிலங்கை துள்ளிக்குதித்து ஆரவாரித்தது. தன்னு டைய சர்வதேச இராஜதந்திரத் தொடர்பாடல் சிறப்புத்  தோற்றுப்போய் விடவில்லை எனக் குறிப்பிட்டு கொழும்பு தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொள்ளவும் தவறவில்லை.

இப்போதும் அதேபோன்ற ஓர் இக்கட்டு புதிதாக வந் திருக்கின்றது. ஐரோப்பிய  நாடுகளுக்கு  ஆடை  ஏற்றுமதிக் கான  வரி  விலக்குச்சலுகை  “ஜி.எஸ்.பி. பிளஸ்” சலுகை   இலங்கையின் கையை விட்டுப் போய்விடும் ஆபத்து  ஏது  நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வ தேசத் தரத்தை  சர்வதேசம் எதிர்பார்க்கும் தர நிலையை  பேணத் தவறியமைக்காக இந்தச் சலுகையை இலங்கை இழக்கும் நிலைமை வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படு கின்றது.
இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தச் சலுகை தொடர்பான கால அவகாசம் கடந்த வருடமே முடிவுற்ற போதிலும், அதனை ஐரோப்பிய ஒன்றியம் அப் போது நீடிக்கவில்லை. நீடிப்பது தொடர்பான முடிவு எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு, அந்த சலுகையை ஒரு வருடத்துக்கு  இந்த ஒக்ரோபர் வரை  தற்காலிகமாகத் தொடர்வதற்கு மட்டுமே அது தீர்மானித்தது.

அதன்படி, இப்போது இறுதி முடிவு எடுக்கும் காலம் நெருங்கிவிட்டது. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கக்கூடிய தீர்மானம் கொழும்புக்குச் சாதகமாக அமையாது என்று பூர்வாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சலுகையை இலங்கை இழக்குமானால் அது இலங்கைக்குப் பொருளாதாரத்தில் பலத்த அடியை  பின்னடைவை  கொடுக்கும் என்பது திண்ணம்.

தைத்த ஆடைகளை இறக்குமதி செய்வதற்கு வரி ஏதும் விதிக்காமல் ஊக்குவிக்கும் சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் இலங்கை உட்பட ஒருசில நாடுகளுக்கு மட்டும் வழங்கியமையால், சர்வதேச சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கைத் தொழிலதிபர்களால் தாராளமாகத் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடிந்தது; முடிகிறது. இந்த ஏற்றுமதி வாய்ப்பை நம்பி பெரும் பொருளாதாரக் கட்டமைப்பே  வலையமைப்பே  இலங்கையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக் கின்றது. மேற்படி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளுமானால் அந்த முழு வலையமைப்பே ஒரேயடியாகப் படுத்துவிடும்.

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ் வாறு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் சுமார் 350 கோடி அமெரிக்க டொலரை (சுமார் 35 ஆயி ரத்து 500 கோடி ரூபாவை) இலங்கை சம்பாதித்தது.

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் வருடாந்தம் உழைத்து இலங்கைக்கு அனுப்பும் 300 கோடி அமெரிக்க டொலருக்கும், தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தம் கிடைக்கும் 120 கோடி டொலருக்கும் அதிகமாக இலங் கைக்கு அந்நிய செலாவணியை கூடியளவில் ஈட்டித் தரும் துறையாக இந்தத் தைத்த ஆடை ஏற்றுமதியே அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல. இலங்கையின் ஏற்றுமதித்துறை யில் அதிக சந்தை வாய்ப்புத் தரும் மையமாக ஐரோப் பிய ஒன்றியமே விளங்குகின்றது. மொத்த ஏற்றுமதியில் 36 வீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின் றது. அடுத்தது அமெரிக்காவுக்கு; 24 வீத ஏற்றுமதி அந்த நாட்டுக்கு.

இந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்படி வரிச்சலுகையை விலக்கிக் கொள்ளுமானால், அந்த ஏற் றுமதியை  நம்பி நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடவேண்டியதுதான். பல  லட்சம் தொழிலாளர்கள்  குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள்  ஒரேயடி யாக வேலை இழப்பர். அவர்களை நம்பியிருக்கும் குடும் பங்கள் வீதிக்கு வரவேண்டியதுதான்.

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிக அசிரத்தையாகவும், மிதப்பு மற்றும் தடிப்புடனும் செயற் பட்டுக்கொண்டு, மேற்குலகையும் உதாசீனப்படுத்தி, தூக்கியெறிந்தபடி முன்னெடுக்கப்படும் இராஜதந்திரம், காலம் தாழ்த்தியாவது கெடுவினையைத் தேடித்தரும் என்று கொழும்பு உணரவேண்டிய வேளை நெருங்கி வருகின்றது என்றே தோன்றுகின்றது.

ஒருபுறம், மேற்குலகைக் கரித்துக்கொட்டியபடி
மறுபுறம், லிபிய அதிபருடன் தோளில் கைபோட்ட படி, வெனிசூலா அதிபருடன் தொடர்பாடல்களை நெருக்கமாக்கிக் கொண்டு, ஈரானுடனும், பாகிஸ்தானுட னும், சீனாவுடனும், பர்மாவுடனும் உறவைப் பலப்படுத் தியபடி  நாட்டை வழிப்படுத்தும் இராஜதந்திரம் எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்ற அமிலச் சோதனை யைக் கொழும்பு முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது.

அந்தப் பரீட்சார்த்த களத்தின் முக்கிய கட்டமே “ஜி.எஸ்.பி.பிளஸ்” வரிச்சலுகை விவகாரமாகும். இந்த நெருக்கடியைக் கொழும்பு எப்படி வெற்றிகரமாகத் தாண்டப் போகின்றது? விரைவில் தெரியவரும்.

Share.

Comments are closed.