டம்பெயர் மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் திருப்தியில்லை: அமெரிக்கா குற்றச்சாட்டு

Google+ Pinterest LinkedIn Tumblr +

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் முனைப்பு திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

 
இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரமாக இடம் நகர முடியாத ஓர் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக அமெரிக்காவுக்கான ஆசிய பிராந்திய துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் சொலலொணா துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின் முன்நகர்வுகள் மிகவும் மந்த கதியில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமான முறையில் கருத்துக்களை வெளியிடக் கூடிய ஊடக சுதந்திரம் தொடர்பிலும் சர்ச்சை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் முகாம்களுக்கு செல்வது குறித்த கெடுபிடிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share.

Comments are closed.