தமிழர்களுக்கு சுயாட்சியை பெற்றுக் கொடுப்பதாக பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர் உறுதி: திவயின

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதாக பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் உறுதிளித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டினால் சில நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என கட்சியின் முக்கியஸ்தரான வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

கொன்சர்வேட்டிவ் கட்சியின் வெளிவிவகார செயலாளராக ஹேக் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு ஆதரவான உலகத் தமிழர் பேரவையுடன் குறித்த அரசியல் தலைவர் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த ரகசிய சந்திப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Share.

Comments are closed.