தமிழினத்தின் ஒன்றுகூடல் பெல்ஜியம் நோக்கி புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம்!

Google+ Pinterest LinkedIn Tumblr +

பெப்ரவரி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம். தமிழீழத்தின் துயரநாள். இந்நாளில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் என்பவற்றிற்கு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தக்கோரி குரலெழுப்ப ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து நடாத்தும் மாபெரும் தமிழினத்தின் ஒன்று கூடலில்  நாம் அணிதிரள்வோம்.

இது தொடர்பாக ஐரோப்பிய தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

04.02.1948 இலங்கைத்தீவு பிறர் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையைப் பெற்றுக் கொண்டது. அதாவது சிங்கள மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் இலங்கைத்தீவின் பூர்வீகக் குடிகளான தமிழ் இனம் தனது உரிமைகள் நிலையில் அதன் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1948 இல் இருந்து பல்வேறு விதமாக தனது போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும், சிறீலங்கா தன் இனவழிப்புத் திட்டத்தை அனைத்துலகம் கூட, இவ் இனவழிப்பை ஏற்றுக் கொள்ளாதவாறு மிகவும் தந்திரமாக நிறைவேற்றி வருகிறது.

இன்று தமிழ் மக்கள் உறவுகளையும், வாழிடங்களையும் இழந்து அகதிகளாக்கப்பட்டு சொல்லொணா வேதனைகளுடன் இருக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு அனைத்துலக சமூகம் வழிவகுக்க வேண்டும் எனவும்,

சிங்கள பேரினவாதத்தினால் 1948 ல் இருந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி ஒறுப்பு வழங்க, அனைத்துலகம் முன்வரவேண்டும் எனவும்

தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில், தமது உரிமைகளுடன் வாழ்வதற்கு அனைத்துலக சமூகம் நேர்மையான வழியில் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும்,

போர்க்கைதிகள் என்று கூறியபடி தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போராளிகளை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் அவர்களை விடுவித்து, அவர்களின் வாழ்விற்கு வழியமைக்கவேண்டும் எனவும்

கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் அருகாமையில்  ( Avenue la Joyeuse Entrée, Brussels) அனைத்து ஐரோப்பிய மக்களவைகளின் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு பலம் சேர்க்க வேண்டும் என ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம் அறைகூவல் விடுக்கிறது.

தமிழினத்தின் ஒன்றுகூடல் இடம் –
ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகாமையில்
(Avenue La Joyeuse Entrée – Brussels – Belgium)

காலம் – 04.02.2010 வியாழக்கிழமை

நேரம் – 14.00 மணி

ந.கிருபானந்தன்
தலைவர்
ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம்
தொடர்புகளுக்கு 0033 625908593

 

 

Share.

Comments are closed.