தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்கள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என அறிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு:

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே,

உலகவாழ் எம்முறவுகளே தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், எமது இணையதளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது

இணைய முகவரி:

www.pulikalinkural.com
செய்கோள் அலைவரிசை விபரம்:

Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500

Fec : 3/4
அதே நேரம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையுடாக தமிழீழம், சிறிலங்கா, இந்தியா மற்றும் அனைத்து ஆசியா நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

புதன், வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற (16 meters) அலைவரிசையிலும், 18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற (25 meters)  அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற (16 meters) அலைவரிசையிலும்18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற (25meters)  அலைவரிசையிலும்20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற ( 49 meters ) அலைவரிசையில் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

இவ்வண்ணம்

புலிகளின்குரல் நிறுவனம்

info@pulikalinkural.com

 

Share.

Comments are closed.