தியாகி திலீபன் நினைவுத் தூபி அழிக்கப்பட்டது – சிங்களக் காடயரின் அட்டகாசம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
தமிழீழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு காலகட்டத்தில் இந்திய அரசின் முன் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்து அகிம்சை வழியில் போராடி வீரச்சாவை தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்கமான வீதியில் தூபி ஒன்று தமிழீழ மக்களால் அமைக்கப்பட்டு இருந்தது.
இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை சிங்கள வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். இந்நிலையில், தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாடானது, அண்மைக்காலமாக வருகை தரும் தென்னிலங்கை வியாபாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்வியாபாரிகளோடு சிறீலங்காவின் புலனாய்வுத்தறையினரும் சிங்களக்காடையினரும் குடா நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
மெல்ல மெல்ல தமிழர் தாயகத்தை விழுங்க முற்படும் சிறீலங்காவானது தமிழர் அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இது இனங்களுக்கிடையிலான மோதல் நிலைக்கு எதிர்காலத்தில் இட்டுச்செல்லும் எனவும் அரசியல்  அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Share.

Comments are closed.