திஸ்ஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Google+ Pinterest LinkedIn Tumblr +

திஸ்ஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த விரிவான அறிக்கை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸநாயகத்திற்கு ஏன் தண்டனை வழங்கப்பட்டதென்பது குறித்து இந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் இலங்கை நீதிமன்றத் துறையின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
நாடொன்றின் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தொடர்பில் கேள்வி எழுப்பும் உரிமை எந்தவொரு நாட்டிற்கோ அல்லது அமைப்பி;ற்கோ கிடையாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறான தீர்ப்புக்கள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
எவ்வாறெனினும், திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து வேதனையடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Share.

Comments are closed.