நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு

Google+ Pinterest LinkedIn Tumblr +

போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும்,    பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு

 

நடைபயணாளி சிவந்தன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரித்தானிய இளையோர் அமைப்பினரைச் சேர்ந்த பரமேஸ்வரன் அவர்களும் குரல்பதிவினை வழங்கியிருந்தார்.

டோவர் கடற்கரையை பிரித்தானிய நேரம் இரவு 10:00 மணிக்கு அண்மிக்கும் சிவந்தனின் கால்கள் இறுக்கம் தளர்ந்து காணப்படுவதோடு, சாப்பிட மனமுமின்றி தண்ணீர் அருந்துவதற்கும் சிரமப்படுவதோடு கதைப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டுக்கொண்டு தன் நடைப்பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

பிரான்ஸை சென்றடையும் சிவந்தன் அவர்களை அங்கு பிரான்ஸ் தமிழர் பேரவை ஏற்றுக்கொள்ள அவரின் நடைபயணம் தொடரும்,. எனவும் தெரிவித்துள்ளனர். எனவே பிரான்ஸ் மக்களும் சிவந்தன் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

Share.

Comments are closed.