நாடு கடந்த ஈழ இராச்சியமொன்றை அமைப்பதற்கு புலிகளின் சர்வதேச வலையமைப்பு முயற்சி

Google+ Pinterest LinkedIn Tumblr +

நாடு கடந்த ஈழ இராச்சியமொன்றை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 16 நாடுகளில் எதிர்வரும் மே மாதம் 17ம், 19ம் திகதிகளில் இந்த ஈழ இராச்சியம் அமைப்பது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, நோர்வே, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம், நியூசிலாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் மூலம் 115 ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் ஊடாக சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் முனைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Share.

Comments are closed.