தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்றிட்டங்களில் ஒன்றாக ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ இருப்பதும் அதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே. திரு உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையில் இதற்கான செயற்குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நாடு கடந்த அரசு குறித்த விளக்கக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இவற்றின் விளைவாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அச்செய்திகளை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவது அவசியமாகும்.
நாடு கடந்த அரசு தொடர்பான கருத்தொற்றுமையை தமிழரிடத்தில் ஏற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துவது மட்டுமன்றி, தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு வழிகோலுவதும் இதன் பின்னாலுள்ள நோக்கங்களாகும்.
‘பிரித்தானிய தமிழர் பேரவை’யானது பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமிக்கதொரு அமைப்பு. அவ்வமைப்புடனான கருத்தாடல்களின் பின்னர் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’க்கான எண்ணக்கருவை அவ்வமைப்பு ஏற்றுக்கொண்டதோடு அதற்கான செயற்றிட்டங்களுக்குரிய தனது ஆதரவையும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பயணத்தில் இதுவொரு மைல்கல். இதை உலகத்தமிழருடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்வடைகிறோம்.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கை:-