நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு கூட்டம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க, கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழ் சமூகம் ஆகியன இணைந்து நடாத்தும் கனடியத் தமிழர் வாக்கெடுப்பு முதலாவது கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.09.2009) கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1976 ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

1977 ல் தேர்தலில் தமிழர் தீர்ப்பு

1985 ல் திம்புக் கோட்பாடு

2004 ல் த.தே.கூ. தேர்தல் கொள்கை

விளக்கம் –  கருத்துப் பரிமாற்றம் – கலந்துரையாடல்

ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவுக்கு வடிவம் கொடுப்பதற்காக கனடிய மண்ணில் நடத்தப்படவிருக்கும் அனைத்துத் தமிழர்களும் பங்கேற்கும் வாக்கெடுப்புத் தொடர்பான இக்கூட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.

ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும் இன்றைய காலகட்டத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பது அத்தியாவசியம்.

2009 செப்டெம்பர் 20  ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை 

கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.

கனடியத் தமிழ் மாணவர் சமூகம்
கனடியத் தமிழ் சமூகம்
 
 

Share.

Comments are closed.