நோர்வேயில் “கம்பி வேலிகளுக்குப் பின்னால்” – ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி

Google+ Pinterest LinkedIn Tumblr +

நோர்வே பேர்கன் நகரில் நடைபெறும் ஐ.நா வாரத்தை முன்னிட்டு, நோர்வே மேற்குப் பிராந்திய ஐ.நா அமைப்பின் அனுசரனையுடன் பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்ப்பாட்டில் “BEHIND BARBED WIRES” (கம்பி வேலிகளுக்குப் பின்னால்) என்ற கருப்பொருளில் ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்று பேர்கன் நகரில் நடைபெறுகின்றது.

22.10.09 வியாழக்கிழமை அன்று இக் கண்காட்சியானது, ஐ.நா வாரத்துக்கான பொறுப்பாளர் Jørge Dahl அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.

இக் கண்காட்சியானது வரும் 30.10.09 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கண்காட்சியில் ஓவியர் திரு எஸ். ராஜன் அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களுடன் தடுப்பு முகாங்களின் நிலைமைகளை எடுத்துக்காட்டும் புகைப்படங்களும் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.

மேலும் 24.10.09 சனிக்கிழமை அன்று நகரின் மத்தியபகுதியில் ஐ.நா வாரத்தை ஆரம்பித்து வைப்பதற்காக் கூடியிருந்த பெருமளவிலான நோர்வேஐpய மக்கள் மத்தியில், முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மக்களின் அவலநிலை துடைப்பதற்கு உலக சமுதாயம் உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தமிழ் இளையோர் அமைப்பினரால் உரையொன்று நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்நிகழ்வானது பேர்கன் நகரின் பிரதான பத்திரிக்கையான “Bergens Tidende”மற்றும் “Bergen Student TV”ஆகிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

 

Share.

Comments are closed.