பரமேஸ்வரனின் நடாத்தை பற்றி விமர்சனம் செய்யும் அளவிலா தமிழ் ஊடகங்கள் என்று அடையாளப்படுத்தும் சில ஊடகங்களின் ஊடக தர்மம் பேணப்படுகிறது

Google+ Pinterest LinkedIn Tumblr +

புலம்பெயர் தமிழர்களின் விடுதலை உணர்வை உடைத்தெறிவதற்கு தமிழின எதிரிகள் போட்ட வவலையில் தமிழ் ஊடகங்கள் சில சிக்குண்டுள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த இனமானத் தமிழன் பரமேஸ்வரன் சார்ந்து வெளியாகிய செய்திகள் ஒட்டுமொத்த புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் கொச்சைப்படுத்துவதாகும்.
சர்வதேச ஊடகம் ஒன்று இப்படியான செய்தியை வெளியிடுகிறதென்றால் அதை சரிவர பௌத்தாய்வு செய்யாமல் எம் இனத் தமிழன் பரமேஸ்வரனின் நடாத்தை பற்றி விமர்சனம் செய்யும் அளவிலா தமிழ் ஊடகங்கள் என்று அடையாளப்படுத்தும் சில ஊடகங்களின் ஊடக தர்மம் பேணப்படுகிறது.
இவ்வாறு செய்தி வெளியிடும் ஊடகங்களை எமது அன்புக்குரிய மக்களாகிய நீ;ங்கள் பகீரங்கமாக கண்டிக்கவேணடும் என்று நாம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எம்மை சிதைப்பதிற்கு பாடுபடும் எதிரிக்கு இப்படியான செய்திகள் சாதகமாகவே பயன்படும். காரணம் இதன் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்களின் மனோபலத்தை பலவீனமாக்கவெ எதிரி முற்படுகிறான். ஏதிர்வரும் காலங்களில் எமது ஊடகங்கள் இவ்விடயத்தில் மிகக் கவனமெடுத்துச் செயற்படுமாறு பணிவுடன் விழிப்புடன் உள்ள இயையோர்கள் ஆகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களில் இது போன்ற முழுவிளக்கமற்ற தெளிவற்ற செய்திகளை வெளியிட்டு எமது மக்களை குளப்பத்துக்கு உள்ளாக்கும் ஊடகங்களை நாம் பட்டியலிட முடிவெடுத்திருக்கின்றோம். 30 000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களினதும் 300 000 க்கும் மேற்பட்ட மக்களினதும் உயிர்த் தியாகத்தின் ஊடாக உருப்பெற்றிருக்கும் தமிழ்த் தேசியத்தை எமது உயிருக்குயிராய் மதித்து சொல்லிளும் செயலிளும் பாதுகாக்க வேண்டுமென்று மீண்டும் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

Share.

Comments are closed.