பிரான்ஸ் தமிழ் மக்களே! சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் இணையுங்கள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பிரான்சின் கடற்கரையான கலையை நேற்றிரவு 8:00 மணியளவில் சென்றடைந்திருந்த சிவந்தன் சிறிய தூரம் தனது நடை பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நேற்றிரவு முதல் பிரான்ஸ் தமிழ் மக்கள் சிலர் இணைந்து நடந்து வருகின்ற போதிலும், ஏனைய மக்களும் இணைந்துகொண்டு சிவந்தனின் கோரிக்கைக்கான தமது ஆதரவை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் அமைதி வணக்கம் செலுத்தி, அவருடனான அறிமுகப்படுத்தலிலும் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் இவரின் உயரிய நோக்கத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை நல்குவார்கள் என கூறினர் அனைவரும் தேனீர் உண்டு தொடர்ந்து சிறுவர்கள், பெண்கள் என நடைபயணத்தை தொடர்ந்தனர். இவரின் இந்த நடைபயணத்தையும், அதனை எதற்காக முன்னெடுக்கின்றார் என்பதை அறிந்த துறைமுகத்தில் வந்திருந்த பல்வேறு இனமக்கள், மற்றும் பிரெஞ்சுக்காவல் துறையினரும் தமது வாழ்த்துதல்களையும், ஒத்துழைப்பையும் நல்குவதாக கூறினர்.

இதனைத் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர் இன்று காலை முதல் அதே உற்சாகத்துடன் நடந்த செல்லுகின்றார்.
 
காலை 8:30 மணியவில் புறப்பட்ட அவர், ஐரோப்பிய நேரம் பிற்பகல் ஒரு மணிவரை 22 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளார். இதுவரை Calais, Guines, Landerethun,-le-nord, Elinghen, Le wast போன்ற இடங்களைக் கடந்து சென்றுள்ள சிவந்தன் Desvres என்ற இடத்தை அடைவதற்கு இன்னும் 21 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

அத்துடன், பிரான்ஸ் தலைநகர் பரிஸை அடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடக்க வேண்டியுள்ளது.

பிரான்சின் ஊடாக நடைபயணத்தை மேற்கொள்ளும் இவருக்கும் இவரின் உயரிய அர்பணிப்புக்கும் மதிப்பளித்து, இந்த வரலாற்று சாதனையை நிலைநிறுத்தி தமிழீழ மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க தமிழ்மக்கள் அலுக்காமல், சலிக்காமல் நம்பிக்கையோடு தொடர்போராட்டங்களை சனநாயக வழியில் நடாத்த வேண்டும் என்றும், தமது பிரதேசங்களுடாக இவர் நடைபயணம் மேற்கொள்ளும் போது எமது மக்களும் சேர்ந்து குறிப்பிட்ட தூரங்கள் நடைபயணம் செய்யுமாறு தமிழர் அமைப்புக்களால் கேட்டுக்கொள்ளப்படுகின்றர்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல்  2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

{ppgallery}news/sivanthan/progress4{/ppgallery}

Share.

Comments are closed.