பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது

Google+ Pinterest LinkedIn Tumblr +

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு அகதி முகாம்களை மூடி விடுமாறும், 11,000 விடுதலைப் புலி சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் டேவிட் மில்பாண்ட விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே தவிர, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அல்ல என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்ற அமர்வுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது டேவிட மில்பாண்ட் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.