புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

1. எமது கடந்தகால அகிம்சை முறைப்போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் ஜனநாயகமுறையானது என்பதை திரும்பவும் உலகுக்கு உணர்த்தும். 

2. நடந்துமுடிந்த அகிம்சா முறை ஆயுதப்போராட்டங்களில் களைத்துப்போயுள்ள மக்கட்கு இது ஓர் உந்துதலையளிக்கும்.

3. இது எமது இறைமைக்கான நடவடிக்கை என்பதையும் எங்களை ஆளும் இறைமையோ உரிமையோ சிறிலங்காவிற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துதல்.

4. சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைக்க அழுத்தம் கொடுத்தல்.

5. சிறிலங்காவின் அராஜக ஆட்சியை உலகிற்கு உணர்த்துதல்.

6. எமது மூன்றாவது கட்டப்போராட்டத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கையை ஓர் ஜனநாயகக் “கருத்து-வாக்கு” ஆயுதமாக்குதல்.

7. 13வது திருத்தத்தை ஏற்க்கச் சொல்வோரின் போலித்தன்மையை வெளிக்கொணர்தல்.

8. அனைத்து தமிழர்களையும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைத்தல்.

9. புலம் பெயர் நாடுகளில் உள்ள இரண்டாவது சந்ததியினர்க்கு இது ஓர் ஈழஅரசியல் போராட்டம் என்ற படிப்பினையாக்குதல.

10. ;புலம் பெயர் தமிழர்களின் ஏனைய ஜனநாயக போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தல்.

11. இதனால் ஈழவர்களின் உரிமைகளை திரும்பப் பெறச்செய்தல்.

12. தமிழர்களின் அபிலாஷைகளை அடையும் தீர்வை இவ் வாக்குக்கணிப்பின் மூலம் கொண்டுவர முடியும்.

13. இவ் வாக்குக்கணிப்பின் மூலம் பல நாடுகள் தமது இறைமையை மீண்டும் பெற்று சுதந்திர நாடுகளாக உள்ளன. உ-ம் ஸ்லோவேனியா.குரோசியா.மசடோனியா.உக்கிரைன்.ஜோர்ஜியா.பொஸ்னியா.மால்-டோவா.கிழக்குதீமோர்.மொன்ரநீகிரோ.போன்றன.

14. இவ் வாக்குக்கணிப்பை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் பட்சத்தில் இலங்கைக்கு சார்பான ஜனநாயக நாடுகள் இலங்கையை எதிர்க்கும் வாய்ப்புண்டு.

15. சிறிலங்கா அரசுக்கு சார்பாக இருந்து அண்டிப்பிழைப்பவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மக்களிடமிருந்து பிரித்துவைக்கும்.

16. உலகநாடுகள் ஜனநாயகத்திற்காக வாக்குக்கணிப்பை பயன்படுத்துவதால் நாம் ஈழவர்களின் ஜனநாயகத்தீர்வுக்காக இலங்கையின் வடக்கு கிழக்கில்வாக்குக்கணிப்பை நடாத்த நிர்பந்திக்க வேண்டும். இதை மேலத்தேய நாடுகள் எதிர்க்க முடியாது.

17. இந்தியா இந்த இக்கட்டான நிலைக்கு தமது மக்களைப் போகவிடாமல் பார்கவேண்டுமானால் இக்கருத்து-வாக்குக்கணிப்பின்றியே ஈழவர் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.

18. புலம்பெயர் தமிழ்மக்கள் உலக ஜனநாயகமுறைகளை எமது மக்களின் ஈழக்கோரிக்கையை அவர்களது எண்ணப்படி தீர்க்க பயன்படுத்தமுடியும்.

19. பலநாடுகள் பொதுவாக்கெடுப்பு அடிப்படையில் பிரிவினை பெற்றுள்ளன.

நடந்தவை

1905 நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப்பிரிந்தன.

1990 ஸ்லோவேனியா

1991 குரோசியா.

1991 மசடோனியா

1991 உக்கிரைன்.

1991 ஜோர்ஜியா.

1992 பொஸ்னியா.

1994 மால்டோவா.

1999 கிழக்குதீமோர்.

1999 மொன்ரநீகிரோ.

2006 தெற்கு ஒசெற்றியன

நடக்க இருப்பவை

2011 தெற்கு சூடான்.

2011 போகன்விலே.

2014 கலிடோனியா.

Share.

Comments are closed.