புலிகளின் மாவீரர் நாள் நிகழ்ச்சியில், ஆஸியில் நெடுமாறன், லண்டனில் வைகோ, டென்மார்க்கில் திருமா, கனடாவில் சீமான் சிறப்புரை நிகழ்த்துவர்

Google+ Pinterest LinkedIn Tumblr +

நாளை 27 ம் திகதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.
மாறுபட்ட தகவல்களால் மாவீரர் நாள் நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

அந்த வகையில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்ணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

இதேபோல லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டென்மார்க் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்று பேசவிருக்கிறார்கள்.
 

Share.

Comments are closed.