இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதன் பின்னரும், அவர்களின் சர்வதேசமயப்படுத்தப்பட்ட வலையமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஏற்றுமதி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனின் வைத்து அங்குள்ள சட்டத்தரணிகள் குழு ஒன்றை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வெளியே முக்கிய விடுதலைப் புலித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்து, நாட்டில் ஜனநாயகம் உருவெடுத்துள்ள போதும், எஞ்சியுள்ள பயங்கரவாத செயல்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியான செயற்பாடுகள் குறித்த, சர்வதேச நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.