போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான நலன்களை பார்வையிடுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக மேஜர் ஜெனெரல் கமோட் அவர்கள், வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி இலங்கை செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் கோத்தபாய, ரோகித போகொல்லாகம,ரட்னசிறி ஆகியோரை சந்தித்த ஐ.நா. சிறுவர்கள் மற்றும்,போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளுக்கான இயக்குனர் ராதிகா குமாரசுவாமி இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அதன் பின்னரான இன்னர் சிற்றி பிரெஸின் கேள்விக்கு பதிலளிக்கையில் தாம் ஒரு பிரதிநிதியை அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மே 17 2009 இற்கு முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்த போது சிறுவர்கள் அதிகளவில் துஸ்பிரயோகங்கள் செய்வதாக துள்ளி குதித்து கொண்டிருந்த ராதிகா குமாரசுவாமி அவர்கள், அதன் பின்னர் இதுவரைக்கும் எந்தவொரு பிரதிநிதியினையும் இதுவரை அனுப்பவில்லை.
ஆனால் வெளிப்படையாக தெட்ட தெளிவாக பல ஆயிரக்கணக்கான சிறார்கள் கொலை, கடத்தல், பாலியல் இம்சைகளுக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றார்கள்.
முகாம்களில் அடைக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். கைதிகள் போல் அவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.