போரின்போது மேற்க்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு பற்றிய விவாதத்திற்கு நான் தயார். ஜனாதிபதி தயாரா?: சரத்பொன்சேகா

Google+ Pinterest LinkedIn Tumblr +

போரின்போது ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவில் உள்ள சரத்பொன்சேகாவின் உறவினர் சம்மந்தப்பட்டிருந்தார் என்றும் அவர் பலகோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்றுக்கொண்டார் என்றும் அரசு ஆதரவு ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்த நிலையில்.இது தொடர்பாக பொன்சேகாவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அரசு ஆதரவு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விமல்வீரவன்சா சவால் விடுத்திருந்தார்.

இது தொடர்பான இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் எதிர்கட்சிகளின் பேச்சாளர்களான மங்கள சமரவீரவும், அனுர திசநாயக்கவும் தெரிவிக்கையில்.

போரின்போது இடம் பெற்ற ஆயுதக் கொள்வனவு தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு போரில் இடம்பெற்ற எந்தவிடயங்களும் தெரியாதவர்கள் எல்லாம் சரத்பொன்சேகாவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்க முடியாது. இராணுவதளபதி என்ற வகையில் சரத்பொன்சேகாவும் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் மகிந்தவும் மட்டுமே இதுபற்றி விவாதிக்க முடியும். அவர்கள் இருவர் மட்டுமே இவ்விவகாரத்தில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள்.

ஆகவே இதுபற்றிய விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவிற்கு சரத்பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். இந்தவகையான விடயத்தை வெளிக்கொனர்ந்த விமல்வீரவன்சாவிற்கு எமது நன்றிகள் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.