மனிதநேயன் சிவந்தன் அவர்களின் வலுச் சேர்ப்போம்

Google+ Pinterest LinkedIn Tumblr +


Sivanthan day 17 2எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உலக வாழ் தமிழீழ மக்களே..!


அன்று நல்லூர் வீதியிலே தியாக தீபம் திலீபன் அண்ணா ஆரம்பித்து வைத்த தியாகப் பயணமானது இன்று புலம்பெயர் வாழ் மக்களிடம் குறிப்பாக இளையவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத் தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆடி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான ஆவணி மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மனிதநேயன் திரு. கோபி சிவந்தன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

மனிதநேயன் திரு கோபி சிவந்தன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு சுவிஸ் தமிழ் இளையோர் ஆகிய நாங்கள் எமது முழு ஆதரவை வழங்கி நிற்பதோடு, அவரின் கோரிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்.

அன்பான உறவுகளே..!

எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருக்கும் இத்தருணத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் ‘போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறப்போவதில்லை’ என்ற சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தாங்கள் மனிதநேயன் சிவந்தன் அண்ணாவின் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் எம்மக்கள் அனைவரையும் குறிப்பாக இளையோர்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் எனத் திரண்டு வந்து இப் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்குமாறு மிகவும் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

தனித்தமிழீழத்துடன் கூடிய உரிமைகளை விரும்பும் தமிழனாக இருந்தால் உங்களைத் தடுக்கும் அமைப்புக்களை புறந்தள்ளி விட்டு வாருங்கள், உங்களைத் தடுக்க முனையும் சுயநலவாதிகளை மிதித்து விட்டு… எம் தலைவனின் வழியில் தமிழீழம் எனும் கனவு நினைவாகிட ஒன்றிணைந்திடுங்கள்.

நாளைய புரட்சி இளையோர் கைகளில்…!

நன்றி
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

Share.

Comments are closed.