மாணவன் தி. கபிலநாத்தின் படுகொலைக்கு சுவிஸ் இளையோர் அமைப்பு கண்டனம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ் இளையோர் அமைப்பு: ஊடக அறிக்கை

சிங்கள பேரினவாத அரசு தமிழ் மாணவர்களைத் திட்டமிட்டமுறையில் படுகொலை செய்வது இது தான் முதல் தடவையில்லை. ஏற்கனவே பல மாணவர்களின் படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கம் கூறுகின்றது நாட்டில் அமைதியை நிலைநாட்டி விட்டோமென்று. இந்த நிலமையில் கடந்த மார்ச் 14  அன்று கடத்தப்பட்ட மாணவன் திருச்செல்வம் கபிலநாத் (வயது 16)  27 அன்று சடலமாக மீட்கப்பட்டது இலங்கையின் நிலையான எண்ணத்தை வெளிக்காட்டியுள்ளது.

யாழ் நாகர்கோவில் பாடசாலை மாணவர்களின் படுகொலை, மாணவி கிருசாந்தி படுகொலை, மாணவன் மயூரன் படுகொலை, வள்ளிபுனம் செஞ்சோலை வளாக மாணவர்களின் படுகொலை, வவுனியா விவசாயக் கல்லுரி மாணவர்களின் படுகொலை, திருகோணமலை மாணவர்களின் படுகொலை என்பன போன்ற தமிழ் மாணவர்களின் படுகொலைகளின் தொடர்ச்சியாகவே மாணவன் கபிலநாத்தின் படுகொலையினையும் நாம் பார்க்கின்றோம்.

எனவே தமிழ் மாணவர்களின் படுகொலைகளையும் தமிழ் இன அழிப்பிற்கான ஓர் அங்கமாகவே நாம் பார்க்கின்றோம். எமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை அனைத்துலக சமூகம் கண்மூடி இருக்காது காப்பதற்கும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இப்பொழுது இலங்கையில் தேர்தல் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழரிற்கு அநீதி ஏற்படுத்தப்படுகின்றதென்றால், தேர்தலிற்குப் பின் மேலும் அதிகமாகலாம் என்ற அச்சம் தமிழரிற்கு உள்ளது.

குறிப்பிட்ட மாணவனின் படுகொலையுடன் இலங்கைப் படையுடன் படுகொலையுடன் இலங்கைப் படையுடன் இணைந்தும், அரசுடன் இணைந்து கட்சியாகச் செயற்படும் தரப்பினரும் தொடர்பு பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் நீதி கிட்டுமென கடந்தகால வரலாறுகளைப் பார்க்கின்ற போது எமக்குத் தெரியவில்லை.

எனவே உலகத் தமிழரும்,அனைத்துலக சமூகமும் தான் தமிழ் மக்களையும், மாணவர்களையும் பாதுகாக்க வேண்டுமென மிகவும் விநயமாக வலியுறுத்துகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

                                                                   தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்

Share.

Comments are closed.