மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் , திருமங்கலம் ,மேலூர் ,சமயனலூர் , மதுரை நகருக்குள்ளும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக சுவர் ஒட்டிகள் பலமாக ஒட்டப்பட்டு இருந்தது.
தமிழக காவல் துறை, அச்சகங்களுக்கு சுவர் ஒட்டிகளை அச்சடித்து தரக்கூடாது என மிரட்டல் விட்டு இருந்தது. அதையும் மீறி சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் சுவர் ஒட்டிகளை பரவலாக எங்கும் ஒட்டினர்.
இதன் காரணமாக அவ்வியக்கத்தின் பெரும்பாலான தோழர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் சுவர் ஒட்டிகள்