ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Google+ Pinterest LinkedIn Tumblr +

ரொறன்ரோ பல்கலைக்கழகத் (ஸ்காபரோ வளாகம்) தமிழ் மாணவர்கள், மே படுகொலைகளை நினைவுகூரும் தொடர் விழிப்புணர்ச்சிகளை தமது பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைத்தனர்.

நினைவு நிகழ்ச்சிகளின் முதற்கட்டமாக, தமிழீழ வரைபடம் வரையப்பட்டு அதன் முன்பாக, தமிழ் மாணவர்கள், தமிழீழத்தில் கடந்த மே மாத காலத்தில் இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட படுகொலைகள், தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகள் பற்றி வேற்று மாணவர்க்கு விளக்கினர்.

இவ்வாறு விளக்கம் பெற்ற வேற்றின மாணவர்கள், சிறிய காகிதத்தினால் ஆன தமிழீழக் கொடியின் பின், தமது பெயரையும், தாம் தனித் தமிழீழம் உருவாகுவதற்கு ஏன் ஆதரவு நல்குகிறேன் என்றும் எழுதி, அக்கொடியை தமிழீழ வரைபடத்தில் பதித்தனர்.

தொடக்கத்தில் பச்சை நிறமாகக் காணப்பட்ட தமிழீழ வரை படம், தமிழ் மாணவர்களின் தொடர் விழிப்புணர்வின் மூலம், இறுதியில் தமிழீழக் கொடிகள் நிறைந்து, செந்நிறமாகக் காணப்பட்டது. இப் பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாக தொடர்ந்து புதிய வடிவில் தமிழீழம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளனர்.

TYO Media – Canada

 

{ppgallery}stories/ppgallery/torontotyo{/ppgallery}

Share.

Comments are closed.