இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை நிர்வகிப்பவர்கள், சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், வேண்டுமென்றே நிவாரணப் பொருட்கள் அல்லல்பட்டுவரும் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் மின்வேலி போடப்பட்ட முகாம்களில் அடைப்பட்டுள்ளனர். இவர்களின் பசியை போக்க, ஐரோப்பிய தமிழர்கள் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையில், யூலை 9-ம் தேதி, 27 கொல்கலன்களில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. ஆயினும் பலவகை காரணங்களை தொடர்ந்து கூறி, கடந்த ஒன்றறை மாதங்களாய், நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திலேயே கிடக்கிறது.
எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட நிலையில், இலங்கை அரசின் எழுத்து பூர்வமான அனுமதியும் ஒரிரு நாளில் கிடைக்கும் பட்சத்தில், இலங்கை செஞ்சிலுவை சங்கம், தற்போது கப்பல் முகவரிடம் சலுகையை எதிர்நோக்கியிருப்பாதாய் செஞ்சிலுவை சங்கத்தின் துணை பொது இயக்குநர் தெரிவிக்கின்றார்.
கொள்கலன்களில் உள்ள பொருட்களை சோதனையிடுகிறோம் என்று காரணத்தைக் கூறி, இதுவரை அக்கொள்கலன்களை கப்பல் முகவருக்கு கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், இக்கொள்கலன்களின் வாடகை செப்டெம்பர் முதலாம் தேதி வரை, இலங்கை ரூபாய் 20 லட்சம் ஆகியுள்ளது.
அனைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ள நிலையில், கப்பல் முகவர் கொள்கலனுக்கான வாடகையில் இலங்கை ரூபாய் 5 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும் என கூறி, நிவாரணப் பொருட்களை அனுப்ப கால தாமதப்படுத்துகிறது, இலங்கை செஞ்சிலுவை சங்கம்.
இச்செயலை பார்த்து வரும் பொதுமக்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை நிர்வகிப்பவர்கள், சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், வேண்டுமென்றே நிவாரணப் பொருட்கள் அல்லல்பட்டுவரும் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாய் வருத்தப்படுகின்றனர்.