வதை முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக் கோரி சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் சூரிச் மாநிலத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது.

Google+ Pinterest LinkedIn Tumblr +
10.10.2009
சுவிஸ் இளையோர் அமைப்பு அறிக்கை

வதை முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக் கோரி சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் சூரிச் மாநிலத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது.

வருகின்ற 24.10.2009 அன்று நடைபெறவிருக்கும்  உண்மைக்காய் எழுவோம் நிகழ்வையொட்டி சுக் பேர்ண் மாநிலங்களைத் தொடர்ந்து இன்;று சூரிச் மாநிலத்திலும் கவனயீர்ப்பு நாடத்தப்பட்டது.

இதுவரை காலமும் தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் மற்றும் நாட்டுப்பற்றாலர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு 17:00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.

அதைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பினரால் தற்போதைய நிலைமையை விளக்கி டொச் மொழியில் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டுது. அங்கு கூடியிருந்த மக்கள் முகாம்களில் எமது மக்கள் படும் அவலங்களைத் வெளிக்காட்டும் பதாகைகளையும் தாங்கி நின்றனர்.

அதைத் தொடர்ந்து இளையோர் அமைப்பின் செயற்பாட்டளர்களாள் உரைகளும் நடாத்தப்பட்டது.
இறுதியாக அங்கு கூடியிருந்த பொதுமக்களும் இளையோர்களும் எமது இலக்குகளை அடையும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்று உறுதி எடுத்து வீடு திரும்பினர்.

அத்துடன் அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களையும் 24.10.2009 பிற்பகல் 15. முணிக்கு பேர்ன் நாடளுமன்றம் முன்பாக அணிதிரளுமாறு இளையோர் அழைப்பு விடுததனர்.

 
 
 
 
Share.

Comments are closed.