இலங்கை அரசாங்கம் வீண் வார்த்தைகளை விடுத்து, செயல்களில் இறங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின், தெற்காசிய உறவுகள் பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பெர்ட் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் தொடர்பில், அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் நிறைவேற்றிய யோசனைகள், இலங்கை தொடர்பில் அதீத கண்டனத்தை சந்தேகம் இன்றி தெளிவுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான வசதியளிப்புகளின் கீழ், அதன் மனித உரிமை மீறல். மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பில் அந்த யோசனையில் அவதானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை, ஐரோப்பிய ஆணையகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில், அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் நேரடியாக எதனையும் செய்யவில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிச்சலுகைத் தொடர்பில் எழுந்துள்ள வெளிப்பாடுகள் குறித்து, அவதானிகள் அவதானித்ததன் பின்னர், ஐரோப்பிய ஆணையகத்தினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.