வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தடுப்பு முகாம்களைவிட்டு வெளியேறி, உறவினர்களுடன் தங்க அனுமதிக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் பான் கி-மூன் சிறீல்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றி தனது கரிசனையை தெரிவித்துள்ளார்.
வன்னியில் இருந்து சிறீலங்கா அரசின் தாக்குதலில் இருந்து தப்ப இடம் பெயர்ந்து வந்துள்ள நிலையில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கருத்து வெளியிடுகையில், அவர்கள் முகாம்களை விட்டு வெளியேறி உறவினர்களுடன் தங்க அனுமதிக்கப்படவேண்டும் என்றும், முகாம்களில் நிலைமை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை எனவும் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்பொதைய நிலைமை வரும் பருவக்காற்று காலத்தை அடுத்து இன்னும் மோசமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்துக்கான கூட்டதின் பின்னர், சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சரை பான் கி-மூன் சந்திக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.