சிறீலங்கா அரசாங்கத்தை தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை, ஐக்கியநாடுகள்சபை தமிழர்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டும், கொசோவாவிற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைத்தது போன்று தமிழர் தாயகத்துக்கும் அனுப்பப்படவேண்டுமென்று வலியுறுத்தி மாபெரும் கையெழுத்துவேட்டையொன்றை “தமிழ் டியாஸ்பொறா” அமைப்பினர் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
இளையோர்களை மையமாகக் கொண்டியங்கும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 23.12.2009 அன்று சூறிச் மாநிலத்தில் 16:30 தொடக்கம் 19:00 மணிவரை இக் கையெழுத்துவேட்டை இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டது.
