தொழிலாழர் கட்சியின் அழைப்பை ஏற்று, இன்று 16.07.2018, சூரிச் மாநிலத்தில், கறுப்பு ஜூலையை முன்னிட்டு, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும், தமிழின அழிப்புச்சார்ந்தும் அவர்களுக்கு கூறப்பட்டதுடன், எமது போராட்டத்தின் நோக்கமும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தகவல்கள் பகிரப்பட்டன.
இச்சந்திப்பின் போது எமது தேசிய உணவுகள், சிற்றுண்டிகள் பகிரப்பட்டு, எதிர்வரும் காலங்களில் எமது போராட்டத்தின் வெற்றிக்கு அவர்களின் உதவியும் ஆதரவும் நிச்சயம் அவசியம் என வலியுறுத்தி ஒன்றுகூடல் நிறைவுபெற்றது.
https://www.facebook.com/media/set/?set=a.1276813905752853.1073741864.299394956828091&type=1&l=13072dae1e