சரத் பொன்சேகாவை கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் சத்தியாக்கிரகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாகவும் இதனையடுத்து அங்கு கண்ணீர்ப் புகை பிரயோகமும். தண்ணீர் பீச்சியடித்தலும் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியும் கம்புகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை, அவ்விடத்தில், ஆயுதங்கள் நிரம்பிய வாகனம் ஒன்று தரித்து நிற்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இன்று முற்பகல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.