யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், முகம் கொடுக்க வேண்டிய பாரிய சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்து விட்டாலும், சவால்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அர்த்தமற்றது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மலோக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்களுடன் தொடர்புடைய பல்வேறு சவால்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்இருப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மீண்டும் இலங்கையில் தமது பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என அவர் தமது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோதல் காலங்களிலும், மோதல்களின் பின்னரும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் அளப்பரியது என்பதை உலகம் அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைக்கப்பட்டமை, இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகள் தொண்டு பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.