இது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம்.
நாம் எம் இனம் பட்ட துன்பங்களை மறந்துவிட்டோமா? குழந்தைகள், இளையோர்கள், கர்ப்பிணி பெண்கள் என கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டீர்களா? இன்னமும் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டீர்களா? அன்றே சொன்னோம் சர்வதேசம் கேட்க்கவில்லை, இன்று அவர்கள் கேட்க்கும் தருனத்தில் நாம் அமைதி காப்பது சரியா?
நாம் எமது மண்ணிற்காகவும், உறவுகளுக்காகவும் செய்யவேண்டிய கடமைகள் உள்ளன. எமது காலத்தின் கடமை உணர்த்து பொங்குதமிழராய் வாரீர்…19.09.2011 அன்று முருகதாசன் திடலில் (ஐ. நா. முன்றலில்) இலங்கை அரசாங்கம் நடத்திய போற்குற்றதிற்கு எதிர் ஓலி பறைத்திட வாரீர்.
புலம்பெயர் தமிழீழ மக்களே…
இன்று மட்டுமல்ல என்றென்றும்
பொங்கட்டும் உங்கள்
உணர்வுகள் எங்களுக்காக…
பொங்கட்டும் உங்கள் கோபம்
சிங்களத்திற்கெதிராய் பொங்கட்டும்…
தமிழீழத்தமிழரின் வாழ்வுக்காய்
பொங்குதமிழாய் பொங்கட்டும்…
தன் மானத் தமிழினமே
மண் மானம் காப்பதுவே
மகத்தான கடமையன்றோ…
பொறுமையின் எல்லை போதுமே
பொங்கி எழுவோம் தர்மமே
எதிரியவன் சிதறி ஓடிட
தமிழா நீ உறுமிப் பாய்ந்திடு…
சுவிஸ் இளையோர் அமைப்பு