மனித உரிமைகளைப் பேண இலங்கை தவறிவிட்டது என்பதால் இதற்கான தண்டனையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை பறிக்கவுள்ள ஜரோப்பிய ஒன்றியம் கோஹொனவைக் குறை கூறியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்பதால் 1 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகள் பெறுமதியான வர்த்தக வரிச் சலுகையை ரத்து செய்யும்படி ஐரோப்பிய ஒன்றிய ஆய்வாளர்கள் பரிந்துரைத்தது தெரிந்ததே. இது சம்பந்தமாக இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான தூதர் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பலத்த கேள்விக்கணைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த மனித உரிமை மீறல் மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வாபஸ் பற்றி இலங்கை விளக்கம் கேட்டிருந்தது. இந்த அறிக்கையில் சிறுவர் கடத்தல், சித்திரவதை மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுதல் என்பன குறித்தும் சுட்டிக் காட்டி, இலங்கையில் ஒட்டுமொத்த முழு அளவிலான மனித உரிமை மீறல்களைத் தாம் கண்டறிந்துள்ளதாகக் கூறியிருந்தது.
ஆனால் கார்டியனுக்கு கொடுத்த செவ்வியில், இவ்வாறு இலங்கையைத் தண்டித்தால் ஏற்றுமதித் துறையில் வேலைபார்க்கும் வறிய பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஐ.ஒ கருத்தில் கொள்ள வேண்டும் என கோஹொன கூறியிருந்தார். அதோடு தாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்துள்ளதை ஐ.ஒ அங்கீகரிக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், இந்த வரிச்சலுகை இனி தமக்குக் கிடைக்கப்போவதில்லை என இலங்கை வணிக அமைச்சர் ஏற்கனவே தீர்மானித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனே பெரும் செல்வாக்குச் செலுத்தும் ஐ.ஒ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை விடயத்தில் கூறுகின்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதரவு அளிக்கிறது. எனவே கோஹொனவின் விளக்கங்களை ஏற்காத ஐ.ஒ தமது அவருக்கு எதிராக தமது வரிச்சலுகையை ரத்துச் செய்யும் முடிவிலேயே உள்ளது. எனினும் இதன் இறுதி முடிவு ஒக்ரோபரிலேயே அறிவிக்கப்படும்.
இந்த வரிச்சலுகை ரத்துச் செய்யப்படும் சமயத்தில் இலங்கையரசு மேற்குலக நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளில் மேலும் விரிசல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த வாரம் பிரிட்டன் செல்வதற்கிருந்த கோஹொனவுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படத் தக்கது. இந்த வரிச்சலுகையால் 7200 வகையான பொருட்களை இலங்கை ஐரோப்பியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தபோது வரி அறவிடப்படவில்லை
1 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகள் பெறுமதியான வர்த்தகம் ரத்து GSP +
Share.