விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. உலக தமிழர்கள் அனைவரும் அமைதியாக வாழவும், அடக்கு முறையை எதிர்த்து போராடவும், ஈழ மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் தனி தமிழ் ஈழம் மலர செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை தலைமையில் கூட்டு (பிராத்தனை) வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாரதீய ஜனசக்தி மாநில செயலாளர் திண்டுக்கல் மாணிக்கம், திருப்பூர் மாவட்டத் தலைவர் தளபதி தன்ராஜ், இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பாலாஜி, மாநில செய்தி தொடர்பாளர் ஜீயர் ரமணன், திருப்பூர் மாநகரத் தலைவர் வேலவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று கூறியுள்ளார்.