சுவிசில், எதிர்வரும் 13 பெப்பிரவரியில் விடுதலைத் தீ

Google+ Pinterest LinkedIn Tumblr +
தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை ழூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13.02.2010 சனிக்கிழமை “விடுதலைத் தீ” எனும் தலைப்பில் நினைவெழுச்சி பேரணியும் ஒன்றுகூடலும் ஐரோப்பியத் தமிழ் இளையோர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட தியாகிகளின் முதலாமாண்டு நினைவையொட்டி ஈகைப்பேரொளி முரகதாசன் தன்னைத் தானே தீமூட்டிய அதே சர்வதேச மைதானத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக நடைபெறவிருக்கின்றது.
ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பகல் 13.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மக்கள் அணிவகுத்துச் சென்று ஈகைப்போரெளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமிழர்களின் உரிமையை மீட்பதற்கும் தாயகத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனிதஉரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறும்.
இறுதி மூச்சையும் எமக்காக சுவாசித்த இவர்கள் இறக்கவில்லை, எம் உள்ளங்களில் என்றும் வாழ்வார்கள். இவர்களின் கனவுகளை நனவாக்கும் கடமை புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறைமை கொண்ட சுதந்திர தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பில் புலம்பெயர் தமிழர் படைத்த மாபெரும் எழுச்சியோடு அந்த அபிலாசைக்காக உலகெங்கும்வாழ் தமிழர்கள் தொடர்ந்தும் போராடுவோம் என்பதையும் நிரூபிக்கும் நாளாக இந்நாள் அமையவேண்டும்.
தீ மூண்ட ஈழ விடுகலைக்காய் தம்மையே தீக்கிரையாக்கிய 19 ஈகைப்போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் அக்கணமே, ஈழத்தாயின் விடுதலைக்காய் எம்மை நாமே உரிமை நெருப்பாக்கி சுடர்பரப்பவேண்டும்.
ஆகையால், அனைத்து ஐரோப்பியாவாழ் தமிழ் மக்களையும் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி அணிஅணியாய் திரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
ஐரோப்பிய தமிழ் இளையோர்
 
 
 
Share.

Comments are closed.