17.03.2020 திச்சினோ மாநில நிலவரம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

இன்று திச்சினோ மாநிலத்தில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக மரித்துள்ளனர். இவர்கள் முன்னரே தீவிரமான நோய்க்கு உள்ளாகியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை திச்சினோ மாநிலத்தில் மட்டுமே 10 நபர்கள் இறந்துள்ளனர் மற்றும் 422 நபர்கள் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.

Airolo இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் மூன்று இளஞ்ர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இராணுவ வீரர்களை பாதுகாப்புக்கருதி கண்கானிகப்பில் வைத்துள்ளனர் என இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் Stefan Hofer கூறுகின்றார்.

இன்று திச்சினோ மாநில அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 19 பங்குனியில் இருந்து 21பங்குனிவரை அனைத்து வணிக மற்றும் உற்பத்தி நிலையங்கள் மூடியிருத்தல் வேண்டும்.

முன்னர் குறிப்பிட்ட நாட்களில் பின் வரும் சேவைகள் மூடப்படமாட்டாது.
மளிகைக்கடைகள்
வெதுப்பகங்கள்
பெட்டிக்கடைகள்
இறைச்சிக்கடைகள்
வணிக நோக்கம் அற்ற உணவகங்கள்
உணவுகளை வழங்கும் சேவைகள்
எரிபொருள் நிலையங்கள்
விடுதிகளுடன் இணைந்த உணவகங்கள்
தபால் நிலையங்கள்
காப்புறுதி நிலையங்கள், வங்கிகள்
அவசர உதவி நிலையங்கள் மருத்துவக்கடைகள்

இந்த சேவைகள் அத்திய அவசியமான தொழிலாளர்களுடன் மாத்திரமே இயங்கவேண்டும்.

Share.

Comments are closed.