தியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்

Google+ Pinterest LinkedIn Tumblr +
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, பார்த்திபன் இராசைய்யா என்கிற தியாகி திலீபன் அண்ணா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் நாள்  தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ம் நாள் அன்று தனது இன்னுயிரை தமிழீழத்திற்காக நீத்தார்.
 தமிழீழத் தமிழர் சுதந்திரம் அடைந்து சமாதானமாக வாழ வேண்டும் என்ற தூய காரணத்துக்காக வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் போன்றவற்றை அருந்த மறுத்து  அகிம்சை வழியிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தார். இப்போராட்டமானது மகாத்மா காந்தியின் போராட்டத்தை விட மேலானது.
போராட்டத்தின் தொடக்கத்தில், “திலீபன் அண்ணா” அவர்கள் ஒரு அறிக்கையில், பதில் வேண்டி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார் :
அவ்வைந்து கோரிக்கைகள் பின்வருமாறு :
– பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால்  பொலிஸ்நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
– வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்கள மக்கள் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
– தமிழ் பிரதேசங்களில் புதிய சிங்கள பொலிஸ் நிலையங்களின் உருவாக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட வெண்டும்.
– தமிழ் பகுதிகளில் அரசாங்கப் பாதுகாப்புப்படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை அகற்ற வேண்டும்.
– தமிழ் பிரதேசத்தை கட்டுப்படுத்த ஒரு தமிழ் அரசாங்கத்தின் தற்காலிக உருவாக்கம் நிகழும் வரை அனைத்து மறுவாழ்வு வேலைகளையும் நிறுத்த வேண்டும்.
திலீபன் அண்ணா அவர்கள், தமிழர்கள் விடுதலை அடைய எதற்கும் துணிவார்கள் எனும் கொள்கையை நன்கு வெளிக்காட்டினார்.
வாழ்க்கை மிகவும் அருமையானது, ஆனால் அதனையும் விட மேலானது நம் சுதந்திரம், நம் கௌரவம், நம் உரிமை.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தியாகி திலீபன் அவர்கள் முன் வைத்த அதே கோரிக்கைகளையே ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமும்  மற்றும் குறிப்பாக ஐக்கிய நாடு சபையினருக்கும் தமிழ் மக்கள் முன் வைக்கின்றனர்.
 தமிழீழ  கெப்பாபுலவு மக்கள் எத்தனையோ மாதங்களாக இராணுவ விமானப் படை  தமது நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
 தமிழீழம் முழுவதும், போர் கைதிகளை விடுவிக்கும்படியும், காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி தகவல்களை பெறவேண்டுமெனவும், விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட பொலிஸ்நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டு வருகிறது.
சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மைக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை நிறுவச்சொல்லி கோரிக்கை விடுக்கின்றார்கள்.
எனவே இவை அனைத்தயும் கருத்தில் கொண்டு தனித் தமிழீழமே நமக்கு தீர்வு என்று கூறுகின்றோம்.
Share.

Comments are closed.