ஜீ-20 நாடுகள் அமைப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்து சுவிட்சர்லாந்து கேள்வி எழுப்பியுள்ளது.

Google+ Pinterest LinkedIn Tumblr +

உலகின் முன்னணி பொருளாதாரங்களை கொண்ட ஜீ-20 நாடுகளின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் சுவிட்சர்லாந்து நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான ஹான்ஸ் ருடொல்ப் மெர்ஸ் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜீ-20 நாடுகள் அமைப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜீ-20 நாடுகள் உலகின் முக்கிய பிரச்சினைகளை கலந்துரையாடுவதாகவும், இதன் மூலம் ஏனைய நாடுகள் ஓரங்கட்டப்படக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக ஜீ-20 நாடுகள் சுவிட்சர்லாந்தை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.