சைப்பிரசில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
- tyo
- கருத்துகள் இல்லை
சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் “ மாவீரர் நாள் 2009 ” நிகழ்வு 28-11-2009 அன்று நிக்கோசியாவில் அமைந்துள்ள INTERNATIONAL STATE FAIRE எனும் இடத்தில் ஓழுங்குசெய்யப்பட்டு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் உரை மீள் ஒலிபரப்பலுடன் ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து மௌன அகவணக்கம் ஈகைச்சுடரேற்றல் என்று தொடர்ந்து கவிதைகள், பாடல்கள், இசை நடனம், உட்பட முத்தமிழ் கலை நிகழ்வாக தொடர்ந்தது,
சுவீடனில் இடம்பெற்ற மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள்
- tyo
- கருத்துகள் இல்லை
சுவீடனில் மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் Stockholm Fittjaskolan விழா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 .00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் தேசிய எழுச்சி உணர்வுடன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.தங்கள் தேசியப் புதல்வர்களுக்கு ஒவ்வொருவரும் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்திய காட்சி இதயத்தை தொடுவதாக அமைந்தது.
சென்னையில் மனிதம் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை போரில் மாண்ட மக்களுக்கு அஞ்சலி
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையில் ஈழப் போரில் மனித உரிமை மீறலால் தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் பலர் இன்று வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு, நேற்று சென்னையில் மனிதம் அமைப்பின் ஏற்பாட்டில் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மனித உரிமை மீறலினால் போரில் பலியான பல்லாயிரக்கானக்கான பொது மக்களுக்கு மனிதம் அமைப்பின் சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்தாதிரிப்பேட்டை கிளை சார்பில் 27.11.2009 அன்று மாலை சிந்தாதிரிப்பேட்டை பள்ளி ஒன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia