தாய்லாந்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
- tyo
- கருத்துகள் இல்லை
தமிமீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர் துயிலுமில்லப் பாடலுடன் மக்கள் மாவீரர் திருவுருவப் படங்களிற்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
கொளத்தூரில் பெரியார் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சி
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர்.
இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்
- tyo
- கருத்துகள் இல்லை
2009ம் ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகளும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இத்தாலி பலெர்மோ நகரில் 27.11.2009 வெள்ளிக்கிழமை மாலை 4மணிக்கு teatro Don Orione மண்டபத்தில் நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக பொது சுடரினை மாவீரர் கப்டன் வண்ணன் அவர்களின் சகோதரன் ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia