வேட்டைக்காரன்: ஊடக அறிக்கை மாணவர் சமுதாயம் – டென்மார்க்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், தமிழ் இளையோர் பேரவை- சுவிஸ்சைத் தொடர்ந்து டென்மார்க் மாணவர் சமுதாயமாகிய நாமும் வேட்டைக்காரனை புறக்கணிக்கிறோம் என டென்மார்க் மாணவ சமுதாயம் விடுத்துள்ள அறிக்கையின் விபரம்: எமது மதிப்புக்குரிய டென்மார்க் வாழ் தமிழ் மக்களே. இளையோர்கள் ஆகிய நாமே சினிமா, இரசிகர்கள் என்ற பொய்மை வாழ்க்கையைத் துறந்து இப்புறக்கணிப்புக்கு முன்வந்துள்ளோம். எமது தாயகத்தில் எமக்காக போராடியவர்களை அழித்த இந்தியக் காங்கிரஸ் நரகாசூரர்களுக்கு துணைபோகும் தமிழ்த்திரை சார் தோழர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடிவெடுத்துள்ளோம். அத்துடன் அந்த நாசாகாரச்செயலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் இறக்குமதியாளர்கள் என்று புலத்தில் தம்மை அடையாளப்படுத்தும் மானமற்ற தமிழர்களை புலம்பெயர்வாழ் இளையோர் சார்பில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஐரோப்பிய இளையோர் பேரவை
- tyo
- கருத்துகள் இல்லை
மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜை எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜையை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜையான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும், என ஐரோப்பிய இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அமெரிக்க செனட் சபை அறிக்கைக்கு எதிராக பலத்த பதிலடி
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தில் எடுக்காமல் விட்டு அதன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க செனட் சபை தனது வெளிநாட்டு உறவுகள் குறித்த அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கையானது “நம்பவே முடியாத அளவுக்கு மட்டமானதாக உள்ளது” என மனித உரிமைகள் அமைப்புகள் பலத்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நபர்களுக்கு இலங்கையைப்பற்றி எதுவித அறிவுமே கிடையாது எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது.
- 1
- 2
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia