ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஐரோப்பிய இளையோர் பேரவை
- tyo
- கருத்துகள் இல்லை
மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜை எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜையை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜையான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும், என ஐரோப்பிய இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அமெரிக்க செனட் சபை அறிக்கைக்கு எதிராக பலத்த பதிலடி
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தில் எடுக்காமல் விட்டு அதன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க செனட் சபை தனது வெளிநாட்டு உறவுகள் குறித்த அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கையானது “நம்பவே முடியாத அளவுக்கு மட்டமானதாக உள்ளது” என மனித உரிமைகள் அமைப்புகள் பலத்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நபர்களுக்கு இலங்கையைப்பற்றி எதுவித அறிவுமே கிடையாது எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது.
இந்தோணிசியப் படையினர் தமிழ் பெண் ஒருவர் மீது தப்பாக நடக்க முயற்ச்சி
- tyo
- கருத்துகள் இல்லை
இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கபட்டுள்ள .அகதிகளில் பெண் ஒருவர் மீது இந்தோணிசியா கடற்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதை அடுத்தும் அதே நேரம் கப்பலில் இருக்கும் இன்னொருவருக்கும் கண்ணில் கோளறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மொழிப்பிரச்சனை காரணமாக மொழி பெயர்ப்பாளராகவும் இந்தோணிசியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்ப்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடக்க முயற்சி செய்தாக தெரிவிக்கபட்டுள்ளது. வீடியோ இணைப்பு.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia