லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
- tyo
- கருத்துகள் இல்லை
லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சுவிட்சர்லாந்து வர்த்தகர்கள் தொடர்பிலான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறீலங்காவில் மிகப்பெரிய மனித பேரவலம் இடம்பெற்றது: எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (M.S.F) வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.
மோதல்களின் போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர்க்காப்பு உதவிகளை பெறுவதில் இருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்சைத் தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் அமைப்பு கூறியிருக்கிறது.
சுவிசில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
23./24.01.2010 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சுவிஸிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் சுதந்திரமும், இறையாண்மையுமுள்ள தமிழீழ தனிநாட்டிற்கான மீள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களில் முக்கியமாக தமிழ் இளையோர்கள் முன்னின்று செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia