சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு (2ம் இணைப்பு)

Google+ Pinterest LinkedIn Tumblr +
தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது.
இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது!
இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டில் ஒரு பொது கருத்துக்கணிப்பை நிகழ்த்தும்படி ஒரு தேர்தல் குழுவை உருவாக்கியுள்ளனர்!
இந்த ஒன்றுகூடலில் இளைய தலைமுறையினர் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இவ்வண்ணம் முன்னெடுத்துச் செல்வதற்கு தமது கல்விசுமையையும் தாண்டி களமிறங்கியிருப்பது வருகை தந்திருந்த 40ற்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களை கவர்ந்திருந்தது. சுவிஸ் நாட்டில் தமிழீழ ஆணைக்கான வாக்கெடுப்பு இத்தைத்திருமாதத்தில் 23ஆம் 24ஆம் திகதிகளில் சகல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட இருப்பதை தேர்தல்குழு இத்தால் அறிவிக்கின்றது.
இப்பணிக்கு எமது மக்கள் சகல பேதங்களையும் மறந்து தமிழீழ தாயை மட்டும் நெஞ்சில் நிறுத்தி இப்பணிக்கு தமது பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும் என வேண்டுகின்றோம். இனி வரும் எமது அனைத்து அரசியல் வேலைகளிற்குமான அடித்தளம் இவ்வாக்கெடுப்பு என்பதை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திர தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பிற்கு பின்னர் சுதந்திரமாக நாம் வாக்களிக்க இருக்கும் தேர்தல் களம் இது என்பதை உணருங்கள்!
ஐனநாயக வழியில் மக்களால் மக்களிற்காக நடத்தப்படுகின்ற இவ்வாக்கெடுப்பில் எமது பங்களிப்பு தான் எமது அரசியல் எதிர்காலத்திற்கான காத்திரத்தை நிர்ணயிற்க போகின்றது.
வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!
உங்கள் வாக்குகளே தமிழர்களின் சுபீட்சமான வாழ்வை நிர்ணயிக்கப்போகின்ற முக்கிய காரணி. எமது தாயக உறவுகளினதும் புலம்பெயர்ந்துள்ள எங்களினதும் எதிர்காலம் சகல விதத்திலும் வளம்பெற எமது முதலாவது அரசியல் பணியை செய்வோம்!!
எமது தேர்தல் நடவடிக்கைகள் சார்ந்த சகல தகவல்களையும் எமது இணையத்தளத்தில் நீங்கள் நேரடியாக (http://www.tamilelection.ch/) பெற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
மக்கள் சக்தியே மாபெரும் சக்தி!
 
பலம் தாருங்கள் அமைப்போம் எமது தேசம்!!
 
சுவிஸ் தேர்தல் குழு
துவாரகன்:  078 905 4718

குருபரன்: 079 308 0669

 

 (2ம் இணைப்பு)

வாக்களிக்கும் தராதரம்

சுவிசில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் இலங்கை வம்சாவளியாக இருக்க வேண்டும்!
அத்துடன் 2010ம் ஆண்டு தை மாதம் 23ம் அல்லது 24ம் திகதி 18 வயதும், அதற்கு மேற்பட்டவர்களும் வாக்களிக்கலாம்!

மேலதிக விபரங்களுக்கு:

குருபரன்: +41 (0) 79 308 06 69

 

மாலதி: +41 (0) 78 307 50 92

மின்னஞ்சல்: info@tamilelection.ch

வாக்காளரை இனங்காணல்

முக்கியம்: உங்கள் அடையாளத்தை நிரூபிக்க புகைபடமுள்ள ஒரு அட்டை அவசியம்! தமிழீழ வம்சாவளியென நிரூபித்தல்

• சுவிஸ் கடவுச்சீட்டு
• சுவிசில் ஏதாவதொரு பதிவிட அனுமதிப் பத்திரம் (N, F, B, C)
• இலங்கை கடவுச்சீட்டு
• இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
• பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (இலங்கைக்கு வெளியில்)
• இலங்கை தேசிய அடையாள அட்டை
• சாரதிப் பத்திரம் (வாகன ஓட்டுனர்)
• சுவிஸ் குடிவரவு திணைக்களத்தின் ஆவணம்.
(அகதித்தஞ்சம் கோருவோர்: பதிவகத்தில் தரப்பட்ட ஏதாவதொரு ஆணவம்)
• தாங்கள் தமிழரெனவும் இலங்கை வம்சாவளியினரெனவும்
உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரத்தை நிரப்புதல் வேண்டும்
(அத்தாட்சிப்பத்திரம் வாக்குச் சாவடியில் கிடைக்கும்).

இளம் வாக்காளர்கள்

• தாங்கள் தமிழரெனவும் இலங்கை வம்சாவளியினரெனவும்
உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரத்தை நிரப்புதல் வேண்டும்
(அத்தாட்சிப்பத்திரம் வாக்குச் சாவடியில் கிடைக்கும்).

 

வாக்களிக்கும் நடைமுறை

• வாக்குச் சாவடிக்கு வந்தவுடன் ஒழுங்கான முறையில் வரிசையாக நின்று அங்குள்ள முதலாவது அலுவலகரிடம் நீங்கள் தமிழ் பேசும் இலங்கை வம்சாவளி வாக்காளரென உறுதிப்படுத்த வேண்டும்.
• அதற்கு பின்னர் இரண்டாவது அலுவலகர் வாக்குச்சீட்டினை உங்களுக்கு வழங்குவர்
• அந்த வாக்கு சீட்டினை ஒரு பிரத்தியேகமான பாதுகாப்பான மேசைக்கு சென்று ஆம் அல்லது இல்லை என வாக்களிக்க வேண்டும்
• வாக்களித்த பின்னர் வாக்கு சீட்டினை வாக்குப் பெட்டியில் போட வேண்டும்.
• இறுதியாக இருக்கும் அலுவலகர் உங்களுடைய கைவிரலில் அழியாத மையினால் அடையாளமிடுவர்.

வாக்கு சீட்டின் வாசகம்

இலங்கைத் தீவின் தனியான தேசத்தினராகிய தமிழ் பேசும் மக்களில் ஒருவர் ஆகிய நான் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையிலான 1977 ஆம் ஆண்டின் ஜன நாயக மக்கள் ஆணையை உறுதிப் படுத்தி என்னுடைய சுய நிர்ணய உரிமையை செயலாற்றி, தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள தமிழ் ஈழ அரசு இலங்கைத் தீவின் எமது தொடர்ச்சியான பாரம்பரிய வட கிழக்கில் உருவாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறேன்.

Ο ஆம் / Ο இல்லை

 

 

Share.

Comments are closed.