சிறீலங்காவில், டெங்கு காச்சலினால் 372 பேர் பலி

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிறீலங்காவில் டெங்கு காச்சலினால் 372 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சிறீலங்காவில் அண்மையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் வைரஸ் தொற்று நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. சிறீலங்காவின் தென்பகுதியில் பரவிய டெங்கு காச்சல் வடபகுதி யாழ்ப்பாணத்தையும் தாக்கியுள்ளது.

 

சிறீலங்காவின் கம்பகா மாவட்டத்தில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

கம்பகா மாவட்டத்தில் 60 பேரும், கண்டி மாவட்டத்தில் 46 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 37பேரும், கேகாலை மாவட்டத்தில 25 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 பேரும், வவுனியா மாவட்டத்தில் 17 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 06 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், 33000ற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காச்சல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் எச்1 என்1 வைரஸ் தொற்றில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிறீலங்கா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.

Comments are closed.